கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு பகுதியில், மணியன் ஸ்டோர்ஸ் என்ற குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனிலிருந்து தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள், அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுவதுடன் பல்வேறு இடங்களில் புழக்கத்தில் விடுவதாகவும் ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடோனில் ஒரு அறையில் தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 70 கிலோ பான் மசாலா பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...மனைவியைப் பார்க்க கிருஷ்ணகிரி வந்துச் சென்ற மருத்துவருக்கு கரோனா