கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அதன் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் நேற்று தொடக்க பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஆறாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவனின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவனை மீட்ட ஆசிரியர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அலுவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவன் தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி வெளியே செல்ல முயன்றுள்ளான். அப்போது அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
சுற்றுச்சுவர் பற்றி ஆய்வு செய்ததில் அந்த சுற்றுச்சுவர் கட்டி சில மாதங்களே ஆன நிலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் மட்டுமல்லாது அப்பள்ளியில் உள்ள கழிப்பறை போன்ற இடங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனவும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க...குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம்: காலி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் போட்டி