கோயம்புத்தூர் குறிச்சி, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், துடியலூர் போன்ற பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் கோவை பேரூர் பகுதிக்குட்பட்ட பூலூவாம்பட்டி பகுதியில் தெருக்கள் சேதமடைந்ததுடன் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்து, வீட்டிலிருந்த உணவு பொருள்களும் வீணாகியுள்ளன.
கரோனா வைரஸ் காரணமாக தங்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில், அரசு அளித்த இலவச அரிசி, நிவாரண நிதியை கொண்டு அன்றாட வாழ்வை கழித்து வந்த நிலையில் நேற்று பெய்த கனமழை மீண்டும் தங்களது வாழ்வை கேள்விக்குறியாக்கி சென்றுள்ளது. எனக் கூறும் இப்பகுதி மக்கள் அரசு விரைந்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!