திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர், திருப்பூர் மாவட்டம் மங்களம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் கரோனா தீநுண்மி தொற்றிற்கு சிகிச்சைப் பெற்றுவந்த அவர், இன்று (ஜூன் 24) அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஏற்பட்ட முதல் கரோனா உயிரிழப்பாகும். மேலும், இதுதான் திருப்பூர் மாவட்டத்தின் முதல் கரோனா உயிரிழப்பும்கூட.
இதையும் படிங்க...சென்னையில் 39 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை!