பொள்ளாச்சி அடுத்த கள்ளிப்பட்டி கிராமத்தில் மணிவண்ணன் என்பவரது மகன் அருண். இவர் ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருப்பதால் தமிழ்நாடு மீன் வளர்ச்சி வாரியத்திடம் கட்லா, ரோகு, மிர்கால் வகையிலான 1000 மீன் குஞ்சுகளை வாங்கி அவரது தோட்டத்தில் மீன் வளர்க்க குட்டை அமைத்து வளர்த்து வருகிறார். அந்த வகை மீன்களுக்கு தேவையான வளர்ப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை தமிழ்நாடு மீன் வளர்ப்பு வாரியத் துறை கோவை உயர் அலுவலர்களிடம் பெற்று வளர்த்து வருகின்றார். இந்நிலையில் தற்போது மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மணிவண்ணன் கூறுகையில், கடந்த ஒருவார காலமாக கிராம பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகின்றது. எங்களது பகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன எனவும் விவசாய நிலங்களில் தென்னை நார் பித்துக்களை பரப்பி வருவதால் பெய்யும் மழைநீரை பூமிக்குள் இறங்குகிறது கடந்த நான்கு நாட்களாக எங்களது ஆள்துளை கிணற்றில் உள்ள நீர் நச்சுத்தன்மை நீராக மாறியது. இதை அறியாமல் நாங்கள் மீன் குட்டைக்கு நீரை விட்டதால் இதனால் தினந்தோறும் மீன்கள் இறக்கத் தொடங்கின.
அதைத் தொடர்ந்து மீன் வளர்ப்பு துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். இறந்த மீன்களை அப்புறப்படுத்துமாறு கூறி மீதமுள்ளோர் மீன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்கான அறிவுரைகளை வழங்கி உள்ளார். இரசாயன நீரில் ஆக்சிசன் முற்றிலும் குறைந்து காணப்படுவதாகவும் மீன் வளர்ப்பு அப்பகுதியில் சாத்தியமற்றது என்றார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், பொள்ளாச்சி வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மணிவண்ணன் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.