கோயம்புத்தூர்: கோல்டு விங்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னைக்குப் பிறகு கோயம்புத்தூர் பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
லெஜண்ட் படத்தைத் தொடர்ந்து, அடுத்த திரைப்படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளேன். அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் மகேசன் கையில் உள்ளது. மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன். மக்களின் அரசியல் சிந்தனை வளர்ச்சி வேகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி மிக சிறப்பாக உள்ளது” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் நடிகர் ரோபோ சங்கர், வெண்ணிலா கபடிக் குழு பட புகழ் அப்புக்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உதயநிதியின் நிறுவனம் என்பதால் விசாரணையை முடக்குகிறாரா சங்கர் ஜிவால்? - சவுக்கு சங்கர் கேள்வி