தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அமமுக நிர்வாகி புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கோவையில் தான் பேசிய வீடியோவை வெளியிட்டது மிகவும் மோசமான செயல் எனவும், இதன்மூலம் இன்னும் சில தினங்களில் பெரிய திருப்பம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கட்சியில் இருந்து என்னை நீக்க முடியாது என கூறிய அவர், அமமுக என்னுடைய கட்சி மட்டுமல்லாமல் எங்களுடைய கட்சியாகும் என்றார்.