ETV Bharat / state

’சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன்': கருணாஸ் உறுதி

கோயம்புத்தூர்: சசிகலாவிற்கு எந்தச் சூழலிலும் அரணாக இருப்பேன் என சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் உறுதி தெரிவித்துள்ளார்.

கருணாஸ் சசிகலா
கருணாஸ் சசிகலா
author img

By

Published : Nov 1, 2020, 6:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் திருநீர் பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுப்படுத்தி விட்டார். இதற்காக ஸ்டாலின் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்பு கேட்க வேண்டும். ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம்.

கருணாஸ் அளித்த பேட்டி

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். இந்த தேர்தலில் கூடுதல் சீட் கேட்பேன். தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லையெனில் அதிமுகவை ஆதரிக்க மாட்டேன். சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன். இன்னும் நூறு பாஜக வந்தாலும் தமிழ் மண்ணில் சமூக நீதி காக்கப்படும்”என்றார்.

இதையும் படிங்க:ட்விட்டரிலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்த மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.