ETV Bharat / state

கணவனிடமிருந்து மகனை தூக்கிச் செல்ல ஆட்களுடன் வந்த மனைவி!

கோவை: கணவனிடமிருந்து தன் மகனை அழைத்துச் செல்வதற்காக மூன்று பேருடன் வந்த மனைவி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

husband_complaint_to police about wife
husband_complaint_to police about wife
author img

By

Published : Oct 26, 2020, 5:17 AM IST

கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாககணேஷ்; இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 7 வயதில் ராஜேந்திரன் என்ற மகன் உள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும் முன் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எழுத்துப்பூர்வமாக எழுதி நீதிமன்றத்திற்கு வழங்கிவிட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் ராஜேந்திரன் நாககணேஷூடன் வசித்து வருகிறார்.

நாககணேஷ்
நாககணேஷ்

இந்நிலையில் நேற்று மதியம் ராஜேந்திரனை அழைத்து செல்ல மூன்று ஆட்களை அழைத்து கொண்டு ஐஸ்வர்யா நாககணேஷ் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். ஐஸ்வர்யா காரிலேயே இருந்த நிலையில், மற்ற மூவரும் காரில் இருந்து இறங்கி சென்றனர்.

மனைவி ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

நாககணேஷ் வீட்டுக்குள் இருவர் செல்ல ஒருவர் வீட்டின் வெளியிலேயே இருந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற இருவர் நாககணேஷின் தாயை தள்ளிவிட்டு ராஜேந்திரனை அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அதற்குள் நாககணேஷ் அவர்களை தடுத்துள்ளார். நாககணேஷின் தந்தை, பேரன் ராஜேந்திரனை தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டுள்ளார்.

நாககணேஷ் அவரது தாய் மற்றும் தந்தை காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்வோம் என்று கூறியதால் பின், இரண்டு பேரும் வீட்டிற்கு வெளியே வந்துள்ளனர். அப்போது நாககணேஷ் வெளியில் வந்து பார்த்தபோது வீட்டிற்கு வெளியில் ஒருவர் இருப்பதும் காரில் ஐஸ்வர்யா இருந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து நாககணேஷ் செல்போன் மூலம் நான்கு பேரையும் படம் பிடிக்க முயன்றபோது நான்கு பேரும் காரில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

கணவனிடமிருந்து மகனை தூக்கிச் செல்ல ஆட்களுடன் வந்த மனைவி

இதுகுறித்து நாககணேஷ் துடியலூர் காவல் நிலையத்தில், ஐஸ்வர்யா மற்றும் அவருடன் வந்த 3 பேர் மீது மகனை கடத்த முயன்றதாக புகார் அளித்துள்ளார்.
நாககணேஷ் வீட்டிற்கு வெளியே நடந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவன் காவல் நிலையத்தில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.