ETV Bharat / state

வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியத்தில் முறைகேடு - தலைமை வனப்பாதுகாவலர் திடீர் ஆய்வு!

கோவை: ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம் மற்றும் ஊதியம் வழங்குவதில் முறைகேடு என புகார் வந்ததையடுத்து, சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

inspection
inspection
author img

By

Published : Dec 30, 2019, 3:18 PM IST

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப் ஆகிய நான்கு வனசரகங்கள் உள்ளன. இந்திய வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்டறியவும், ஆய்வு மேற்கொள்ளவும் 500க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் ஒப்பந்தப் பணியாளராக இங்கு பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வனத்துறை சார்பில் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி புலிகள் காப்பகம் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திலுள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

வேட்டை தடுப்பு காவலர் அலுவலகத்தில் தீடீர் ஆய்வு

இதில் வேட்டை தடுப்பு காவலர்கள் வங்கி கணக்கு விவரங்கள், வங்கி கணக்கு நகல்கள், அவணங்கள் உள்ளிட்டவை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி சேகரித்துச் சென்றனர். ஆவணங்கள் சரிபார்த்து முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என லீமா ஜோஷி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கீழே கிடந்த செல்ஃபோனை எடுத்த நபர் அடித்து கொலை!

Intro:rideBody:rideConclusion:ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம் மற்றும் சம்பளம் வழங்குவதில் முறைகேடு என புகார் சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி திடீர் ஆய்வு பொள்ளாச்சி 29 ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தில் பொள்ளாச்சி வால்பாறை மானாம்பள்ளி டாப்ஸ்லிப் ஆகிய நான்கு கரங்கள் உள்ளன இந்திய வளங்கள் நடமாட்டத்தை கண்டறியவும் ஆய்வு மேற்கொள்ளவும் 500க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றுகின்றனர் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் இவர்களுக்கு வனத்துறை சார்பில் மாத ஊதியமாக 8,000 முதல் 10,000 வரை வழங்கப்படுகிறது இந்நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள் வழங்கப்படும் ஊதியம் முறையாக வழங்குவதில்லை எனப் புகார் எழுந்து வந்தது இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் அலுவலகங்களில் சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி திடீர் ஆய்வு மேற்கொண்டார் பொள்ளாச்சி உனக்கு ஓட்டத்தில் நான்கு வருடங்களில் பணியாற்றிவரும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது வேட்டை தடுப்பு காவலர்கள் வங்கி கணக்கு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் வேட்டை தடுப்பு காவலர்கள் வங்கிகணக்கு நகல்களை உள்ளிட்ட ஆவணங்களை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகரித்து சென்றார் ஆவணங்கள் சரிபார்த்து விசாரணை முடிந்தவுடன் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.