ETV Bharat / state

பல நூறு கோடி ரூபாய் ஊழல்:திமுக அரசு ஆபத்து -அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு! - கோவை திமுக அரசு

'பதிவுத்துறையில் பல நூறு கோடி ரூபாய் கையூட்டு நடைபெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பல நூறு கோடி ரூபாய் ஊழல்:திமுக அரசு ஆபத்து -அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

author img

By

Published : Feb 14, 2023, 10:43 PM IST

பல நூறு கோடி ரூபாய் ஊழல்:திமுக அரசு ஆபத்து -அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

கோவை அருகே ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1998ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 25ஆம் ஆண்டு புஸ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், விஷ்வஹிந்து பரிசத் மாநில பொது செயலாளர் லக்ஷ்மண் நாராயணன், பாஜக மாநில துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'பதிவுத்துறையில் பல நூறு கோடி ரூபாய் கையூட்டு நடைபெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா?' என கேள்வி எழுப்பினார்.

மேலும் அண்ணாமலை, 'பாஜகவின் சார்பில் 15 நாள்கள் கால அவகாசம் தருகிறோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போஸ்டர் அடித்து ஒட்டப்படும். மேலும், கைது செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். மட்டன் கொடுக்கின்றனர். புடவை கொடுக்கின்றனர். திருமங்கலம், அரவக்குறிச்சி மாடல் எல்லாம் தேர்தலில் நடைபெறுகிறது. எனவே, கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளோம். ஏற்கனவே மாநிலத் தேர்தல் ஆணையம் ஆடியோ வெளியிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை' எனக் கூறினார்.

இதையடுத்து அவர், 'பிரதமரின் பேச்சுக்கு முதலமைச்சர் சொல்கிறார் கற்பனை என்று. தமிழ்நாடு அரசுக்கு ஒரே ஒரு அக்கறை மட்டும் தான் உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி அடைய வேண்டும். மேலும், சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆனதற்கு மகிழ்ச்சி. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
நாளை பிரிவு உபசார நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மக்களுக்கு நன்றி.

கோவையில் வன்முறை அதிகரித்துள்ளது. எஸ்.பி. அலுவலகம் அருகில் ஓட ஓட வெட்டும் நிகழ்வு நடந்துள்ளது. இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கோவை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மந்திரி வேட்டி, சேலைக்கு பணம் கொடுக்கச் சுற்றி வருகிறார். இவர்கள் மீது கோவை மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

சமூக நீதிப் பேசும் உங்களை கவர்னர் ஆழ்ந்து பார்த்து வருகிறார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் சொல்கிறோம். இப்படி ஆட்சி நடந்தால் சாமானிய மக்களுக்கு கண்டிப்பாக ஆபத்து நேரிடும்.
காவல் துறையை சுதந்திரமாக வேலை செய்ய விடுங்கள். தவறு செய்யும் நபர்களுக்குத் தண்டனையினை உயர்த்துங்கள். எதையும் மூடி மறைக்காதீர்கள். உண்மையை சொல்லி தண்டனை கொடுங்கள்.

காவல் துறை பொய்யான செய்திகளை பத்திரிகைகளுக்குத் தருகின்றனர். பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து வருகின்றனர். அதில் அதிமுக தலைவர்கள் வருவார்கள். எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’ என்றார்.

பாஜக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் வருவாரா? என்ற கேள்விக்கு ஆலோசனை செய்வதாக தெரிவித்தார். ’நெடுமாறன் அய்யா தொடர்ந்து இது போன்று பேசுகிறார். இலங்கையின் பல பகுதிகள் மோடி அய்யாவை நம்பியுள்ளது. டெவலப்மெண்ட் ப்ராஜெக்ட்டில் மோடி அய்யாவை நம்பி உள்ளனர். மேலும், இலங்கை பிரச்னையைத் தீர்க்க ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. காங்கிரசும், திமுகவும் எந்த விதத்தில் கூட உகந்த கூட்டணி அல்ல.

பாஜகவை பொறுத்தவரை 2009-க்குப் பிறகு நடக்கக்கூடிய சூழலுக்கு போய்க்கொண்டு உள்ளோம்.
அரசாக சொல்லும்பொழுது ஏற்றுக்கொள்ளலாம். நெடுமாறன் 2009-ல் என்ன சொன்னாரோ அதைத்தான் தற்பொழுதும் சொல்லி வருகிறார். இலங்கை பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கொடுக்க முடியும் என்றால் அது மோடியால் தான் என்று நெடுமாறன் தெரிவித்திருந்தார். பிபிசி மீது வருமான வரித்துறை சோதனைக்கு காரணம் இல்லை. அதிகாரிகள் எவிடன்ஸ் அடிப்படையில் சோதனை செய்கிறார்கள்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு: பிபிசி நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.