கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காவலர்கள் சமூக நலக் கூடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இந்த வகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு மாவட்ட காவல் ஆணையர் சுமித்சரண் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினர்.
இந்த பயிற்சி வகுப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் எப்படிப்பட்ட சட்ட நுணுக்கங்களை கையாள வேண்டும் என்று காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எச்சரிக்கை என்ற வாசகங்களுடன் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம், புகார் அளிக்க காவல்துறையின் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட மாநகர் காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.