ETV Bharat / state

பலத்த காற்றுக்கு எட்டு வீடுகள் இடிந்து சேதம்!

மழை காரணமாக வீடுகள் இடிந்து சேதமடைந்ததை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு மலைவாழ் மக்களுக்கு ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.

பலத்த காற்றுடன் மழையால் வீடுகள் இடிந்து சேதம்!

author img

By

Published : May 16, 2021, 11:38 AM IST

கோயம்பத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாறு அடுத்து சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், இன்று (மே.16) காலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.

இதனால், எட்டு வீடுகள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி, நேரில் சென்று பார்வையிட்டு மலைவாழ் மக்களுக்கு ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களை ஆழியாறு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர் மா.சுந்தரம், அப்புசாமி கார்த்திகேயன், பாலு, சிவா ஆகியோர் அமுல் கந்தசாமி உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 33,658 பேருக்குக் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.