ETV Bharat / state

வீடுகளை இழந்து நடுக்காட்டில் தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள்...! - வீடுகளை இழந்து தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள்

கோவை: பொள்ளாச்சி அருகே வீடுகளை இழந்து நடுக்காட்டில் ஆதரவின்றி தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள், தங்களுக்கு உதவ அரசு முன்வருமா என ஏக்கத்துடன் தவித்துவருகின்றனர்.

வாரிச் சூருட்டிய நிலையில் சர்க்கார்பதி கிராமம்
author img

By

Published : Oct 2, 2019, 2:45 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள அருவி, காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தக் காட்டாற்று வெள்ளம் செடி, கொடிகளை வாரி எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், மலைவாழ் மக்களின் 22 வீடுகளையும் சுருட்டி எடுத்துச் சென்றுள்ளது.

சிறுமி மரணம்! - சோகமே உருவான கிராமம்

மலைவாழ் கிராமமான சர்க்கார்பதியில் சுமார் 22 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் விக்னேஷ், சுந்தரி என்ற இரு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சுந்தரி ஐந்து நாட்களுக்கு பிறகு சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

சிதலமடைந்து கிடக்கும் வீடுகள்
சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள்

பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பற்ற தங்கும் இடம்

இந்தச் சோகம் ஒருபுறமிருக்க வீடு, உடமைகள் இழந்து நிர்கதியாக உள்ள மக்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அரசு அலுவலர்கள் மின்வாரிய அலுவலகத்தில் தங்க இடம் ஒதுக்கியுள்ளனர். அந்த அலுவலகம் இன்றோ, நாளையோ இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், உயிருக்குப் பயந்தே மலைவாழ் மக்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையிலும் அவர்கள் கேட்பது காசு, பணம் இல்லை; தங்குவதற்கு நிரந்த வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே. இதையறிந்த வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார். போனவர் போனவர்தான் திரும்ப வரவேயில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

உதவி செய்யும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள்
உதவி செய்யும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள்

ஈரமனதுடன் நேசக்கரம் நீட்டிய 'உதவும் இதயங்கள்' தொண்டு நிறுவனம்

அரசின் நிலை இப்படியிருக்க வேதனையுடன் இருக்கும் மக்களுக்கு 'உதவும் இதயங்கள்' என்ற தனியார் தொண்டுநிறுவனம் அனைத்து குடும்பத்திற்கும் தேவையான உடைகள், அரிசி, சமையல் பாத்திரங்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவைகளை கொடுத்துள்ளன.

வாரிச் சுருட்டிய நிலையில் சர்க்கார்பதி கிராமம்

இது குறித்து கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறுகையில், "பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எல்லாமே செய்து தருகின்றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை அம்மாநில அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசோ இதில் ஒன்றுகூட செய்து தரவில்லை" என வேதனை தெரிவித்தார்.

Intro:houseBody:houseConclusion:பொள்ளாச்சி அருகே வீடுகளை இழந்து நடுக்காட்டில் ஆதரவின்றி தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ்மக்கள் அரசு உதவ முன் வருமா என அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
பொள்ளாச்சி. 01
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மாதம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த மாதம் 8 ஆம் தேதி கனமழையால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு மண்சரிவு ஏற்பட்டது இதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சியை அடுத்துள்ள சர்க்கார்பதி பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதியிலிருந்து உருண்டு வந்த பாறைகள் காண்டூர் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டது காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்திமலை அணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் நீர் கசிவு ஏற்பட்டு சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது இதில் அங்கிருந்த 22 வீடுகளும் முற்றிலுமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு தரை மட்டமாக காணப்பட்டது அங்கிருந்த மக்கள் வெள்ளத்தில் அலறி அடித்தபடி அருகிலுள்ள மரக்கிளைகளை பிடித்து உயிர்தப்பினர் மற்றும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதில் விக்னேஷ் எனும் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இரண்டு வயது சிறுமி சுந்தரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலமாக வனத்துறை வருவாய்த் துறையும் அரசு அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்நிலையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் சிறுமி 6 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் அருகில் உள்ள மின் வாரிய குடியிருப்பு பகுதியில் அதுவும் மிகவும் சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ள குடியிருப்பில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அவர்கள் உயிருக்கு பயந்த நிலையில் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் நாங்கள் தங்குவதற்கு அடிப்படை வசதியும் எங்களுக்கு வீடுகள் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்கள் உறுதியளித்தனர் ஆனால் தற்போது வரை அவர்களை மீண்டும் பதிக்கப்பட்ட சந்திக்கவில்லை என்று வேதனை தெறிவிக்கன்றனர்.
இந்நிலையில் வீடுகளை இழந்து தவித்த மக்களுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த உதவும் இதயங்கள் எனும் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக அவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அங்குள்ள அனைத்து குடும்பத்திற்கும் தேவையான துணிகள் மற்றும் அரிசி சமையல் பாத்திரங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார தொழிலுக்கு முக்கிய பொருளாக கருதப்படும் அரிவாள்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது இதேபோல் அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தனியார் தொண்டு நிறுவனமான உதவும் இதயங்கள் உதவி வந்த நிலையில் மீண்டும் பொள்ளாச்சியை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் அவர்களும் அவர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவினார்கள் ஆனால் அரசிடம் அவர்கள் பலமுறை கோரிக்கை வைத்து எந்த பயனும் இல்லை என மனவேதனையுடன் தெரிவிப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.
தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு மீண்டும் அவர்கள் குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது வீடுகளை இழந்த மக்கள் தற்போது தகர சீட்டுகளையும் மரக்கட்டைகளை வைத்து மிகவும் மோசமான நிலையில் தங்கி உள்ளார்கள் அவர்கள் கூறுகையில் வீடுகளை இழந்து நிற்கும் எங்களுக்கு அரசு உதவ முன்வருமா என அவர்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இதைப்பற்றி பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவை மாவட்டம் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறுகையில் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எல்லாமே செய்து தருகின்றார்கள் அவர்களுக்கு 6.40 லட்சம் மதிப்பில் மிகவும் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன சாலை வசதிகள் மற்றும் மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு வனத்துறை அதிகாரிகள் ஏன் மலைவாழ் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்தி தர மறுக்கின்றார்கள் ஆனால் இதே வனப்பகுதியில் அரசு ஊழியர்களுக்கும் வனத்துறை ஊழியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கான்கிரீட்டில் ஆன சொகுசு விடுதிகளும் காங்கிரீட் கட்டிடங்கள் கட்டித்தரப்படும் இந்த அரசு வணத்தை நம்பியுள்ள மலைவாழ் மக்களுக்கு இந்த வசதிகளை செய்து தர முன்வருவதில்லை.
சர்க்கார் பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அப்பாவி மக்களை தற்போது எந்த விதமான பாதுகாப்பு இன்றி அங்கு தங்க வைப்பது மீண்டும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தற்போது பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் மீண்டும் மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டால் இதேபோன்று விபத்து ஏற்பட நேரிடலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் எனவே உடனடியாக வீடுகளை இழந்து தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்புடன் தரைமட்ட பகுதியில் அரசு வீடுகளை கட்டித் தரவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதியை செய்து தரவும் மின்விளக்கு வசதி செய்து தரவும் உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு செய்துகொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ( Etv பாரத் சிறப்பு செய்தி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.