திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலை வைக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து கோயம்புத்தூர் மாவட்ட கோனியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் தலைமையிலான 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கத்தியை காட்டி ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் பறித்த இந்து முன்னேற்ற கழக மாநில ஒருங்கிணைப்பாளர்