ETV Bharat / state

ஆ. ராசா பேச்சை கண்டித்து இந்து முன்னணி போராட்டம் - இந்து முன்னணி போராட்டம்

இந்துக்களை அவதூறாகப் பேசியதாகக் கூறி எம்.பி ஆ.ராசாவிற்கு எதிராக இந்து முன்னணியினர் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆ.ராசாவிற்கு பேச்சுக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்...!

author img

By

Published : Sep 18, 2022, 8:40 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் இந்துக்களை அவமதித்து பேசியதாக கூறி எம்.பி ராசாவைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி எம்.பி ஆ.ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆ.ராசாவிற்கு பேச்சுக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம்...!

இந்நிலையில், பொள்ளாச்சியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன், இந்து முன்னணி கோட்ட செயலாளர்கள் பாலச்சந்திரன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ராசாவின் பேச்சை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து உண்ணும் அளவிற்கு தரமானதாக இருக்குமா?: சீமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.