ETV Bharat / state

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

கோவை: மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக சாலையில் பெருகெடுத்து ஒடிய மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர்.

கொட்டித்தீர்க்கும் மழை
author img

By

Published : Oct 18, 2019, 10:31 AM IST

தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கோவை மாநகர் பகுதிகளான உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வடகோவை, காந்திபுரம், பீளமேடு, விமானநிலையம் போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் தேங்கிய நீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டித்தீர்க்கும் மழை

இதையும் படிங்க:மிரட்டும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிகார்!

Intro:கோவையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த மழை 2மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிகுள்ளாயினர்.
Body:
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு மணிநேரத்திற்க்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கோவையில் பல பகுதிகளில் பகல் நேரங்களில் அதிக வெயில் காரணமாக அவதிபட்ட பொதுமக்கள் மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக கோவையில் மாநகர் பகுதிகளான உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியரலுவலகம், வடகோவை, காந்திபுரம், பீளமேடு, விமானநிலையம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரங்களில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில்

ஒரு மழைக்கே தாங்காத தார்சாலை போட்ட கோவை மாநகராட்சிக்கு கப்பல்விட்டு சேதி அனுப்பும் போராட்டத்தை கோவை சிவானந்தபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தை நடத்தினர். இதே போன்று கோவையில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் கரும்புக்கடை திப்பு நகரிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட தாழ்வான வீடுகளில் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஆசாத் நகர், பிஸ்மி நகர் குழந்தை கவுண்டர் வீதி, பாத்திமா நகர் , சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீட்டிற்குள் இருக்கும் தண்ணீரை வெளியே இறைத்து வருகின்றனர். ராஜவாய்க்காலை ஒட்டி இருக்கும் இப்பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் , தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஆபத்து ஏற்படும் முன் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாநகரின் புறநகர் பகுதிகளான வாளையார், சுண்டக்காமுத்தூர், கோவைபுதூர், சிறுவாணி சாலை, பேருர், பச்சாபாளையம், தொண்டாமுத்தூர், வடவள்ளி, இடையர்பாளையம் தடாகம் போன்ற பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளை ஒட்டிய தீத்தீபாளையம், தென்கரை, இக்கரை போளுவாம்பட்டி, வெள்ளியங்கிரி, பூண்டி, காருண்யா, கோவை குற்றாலம் மற்றும் சிருவாணி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கோவையில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.