கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்.20) காலை 11 மணி அளவில் கோவை மாநகர் பகுதிகளான ரயில் நிலையம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்பதனம் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: மதுரை புறநகர் சுற்றுவட்டார பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பலத்தமழை!