ETV Bharat / state

சீன அதிபருக்காக கோவையில் தயாரான தங்க ஜரிகை பொன்னாடை - breaking news in chennai today

கோவை: கைத்தறி நெசவாளர்கள் தங்க ஜரிகையினால் தயாரித்த பொன்னாடையை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது.

பிரத்யேக பொன்னாடை
author img

By

Published : Oct 12, 2019, 9:04 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கும் இருநாட்டுத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கின்றன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒருசில ஆச்சர்ய பரிசுகளையும் அவருக்கு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

இதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் உருவம் பதித்த சிவப்புப் பட்டுப் பொன்னாடை ஒன்று அவருக்காகத் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டுப் பொன்னாடை கோவை மாவட்டம் சிறுமுகையில் பட்டு கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்டிருக்கிறது. மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் நெய்யப்பட்டுள்ள இந்தப் பட்டுப் பொன்னாடை, கிளாசிக் பட்டு நூல்களைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கிறது.

சீனாவின் தேசியக் கொடி சிவப்பு நிறம் என்பதால், இந்தப் பட்டுப் பொன்னாடையும் சிவப்பு நிறத்தில் நெய்யப்பட்டிருக்கிறது. பொன்னாடையின் மையத்தில் தங்க ஜரிகையில் ஜி ஜின்பிங் சிரித்த முகத்துடன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அவருக்குக் கொடுக்கும் பரிசுகள் ஏராளம் என்றாலும், நெசவாளர்களின் இந்தப் பட்டுப் பொன்னாடை நிச்சயமாக அவரின் இதயத்தைத் தொடும். ஜி ஜின்பிங்குடன் சிறுமுகை பட்டும் சீனாவுக்குப் பயணப்பட இருக்கிறது.

Intro:சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பரிசாக அவரது உருவம் பதித்த தங்க சரிகை பொன்னாடை கோவையில் கைத்தறி நெசவாளர்களால் தயாரானது.இன்று அதிபருக்கு வழங்கப்படுகிறது.Body:மாமல்லபுரத்தில் நடக்கும் இரு நாட்டு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வருகை தந்திருக்கிறார். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், தமிழக அரசும் மத்திய அரசும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கின்றன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், ஒரு சில ஆச்சர்யப் பரிசுகளையும் அவருக்கு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு.இதற்காக

சீன அதிபர் ஜி ஜின்பிங் உருவம் பதித்த, சிவப்புப் பட்டுப் பொன்னாடை ஒன்று அவருக்காகத் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டுப் பொன்னாடை கோவை மாவட்டம் சிறுமுகையில் பட்டு கைத்தறி நெசவாளர்களால் நெய்யப்பட்டிருக்கிறது. மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் நெய்யப்பட்டுள்ள இந்தப் பட்டுப் பொன்னாடை, கிளாஸிக் பட்டு நூல்களைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கிறது.
சீனாவின் தேசியக் கொடி சிவப்பு நிறம் என்பதால், இந்தப் பட்டுப் பொன்னாடையும் சிவப்பு நிறத்தில் நெய்யப்பட்டிருக்கிறது. பொன்னாடையின் மையத்தில் தங்கச் சரிகையில் ஜி ஜின்பிங் சிரித்த முகத்துடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருக்குக் கொடுக்கும் பரிசுகள் ஏராளம் என்றாலும், நெசவாளர்களின் இந்தப் பட்டுப் பொன்னாடை நிச்சயமாக அவரின் இதயத்தைத் தொடும். ஜி ஜின்பிங் உடன் சிறுமுகை பட்டும் சீனாவுக்குப் பயணப்பட இருக்கிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.