கோயம்புத்தூர்: விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் (ஏப்.29) விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கள் கடத்துவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் நடத்திய சோதனையில், மலேசிய நாட்டைச் சேர்ந்த பயணிகள் தங்கேஸ்வரன், நந்தினி ஆகிய இருவரையும் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
மேலும், அவர்கள் கொண்டுவந்த உடைமைகளையும் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர்களது பைகளில் 2.26 கோடி ரூபாய் மதிப்புடைய 4.2 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (ஏப்.30) கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கேரளா விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் கடத்திய தம்பதியினர் கைது!