ETV Bharat / state

Gold jewellery theft: ஐடி ஊழியர் வீட்டில் 18 சவரன் நகை கொள்ளை

author img

By

Published : Dec 27, 2021, 11:28 PM IST

Gold jewellery theft: கோவையில் ஐடி ஊழியர் வீட்டில் 18 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளை
ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளை

Gold jewellery theft: கோவை மாவட்டம் காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி தனது குடும்பத்துடன் சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு சென்றார். நேற்று (டிச. 26) இரவு வீட்டிற்கு மீண்டும் திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 18 சவரன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது.

ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளை

இதையடுத்து, கிறிஸ்டோபர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் ஐடி ஊழியரின் வீட்டிற்குள் வந்து செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.