ETV Bharat / state

தங்கம், வெள்ளி முகக் கவசம்: ஆடம்பர விழிப்புணர்வில் நகைக்கடை உரிமையாளர்! - gold silver face masks

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாரும், பொற்கொல்லருமான ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சாரியா என்பவர் தங்கம், வெள்ளியில் முகக் கவசம் செய்து ஆடம்பர வாடிக்கையாளர்களை ஈர்த்துவருகிறார்.

தங்க முகக் கவசம்
தங்க முகக் கவசம்
author img

By

Published : Jul 21, 2020, 10:15 PM IST

Updated : Jul 23, 2020, 3:23 PM IST

உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊடங்கை அமல்படுத்தி உள்ளன. மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் முகக்கவசம் பிரதானமாக உள்ளது. சாதாரணப் பருத்தி முகக் கவத்திலிருந்து உயர் ரக என் 95 முகக் கவசங்கள் வரை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

தற்போதுள்ள சூழலில் முகக் கவசம் அணியாதவர்களை கரோனா நோயாளி போல் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள் முகக்கவசத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதனால் முகக்கவசங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. அதனால் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் மறுபயன்பாட்டு முகக்கவசங்கள், மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு முகக் கவசங்கள் என தாயாரிக்க களமிறங்கிவிட்டனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு சவால்விடும் வகையில் களமிறங்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அசோகபுரத்தில் நகைக்கடை நடத்திவரும் ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சாரியா. அவர் உரிமையாளர் மட்டுமல்ல பொற்கொல்லருமாவார். அவர் ஊரடங்கில் மந்தமான வியாபாரத்தை மீட்கவும், நகைக்கடைக்கு மக்களை ஈர்க்கவும் திட்டம் தீட்டினார்.

அதனால் அவர் தங்கம், வெள்ளியில் முகக் கவசங்கள் தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி செய்தும் முடித்தார். எப்படி என்றால் தங்கம் மற்றும் வெள்ளி நிறத்திலான ஆடையில் முகக் கவசங்களை தைத்து அதில் தங்க, வெள்ளிக் கம்பியிழைகளை கோர்க்கிறார். அப்படி கோர்க்ப்படும் தங்க, வெள்ளியின் அளைவையும் வடிவத்தையும் பொறுத்த விலையை தீர்மானிக்கிறார்.

அப்படி செய்யப்பட்ட முகக்கவசங்கள் முழுவதும் தங்க, வெள்ளி முகக் கவசங்கள் போல காட்சியளிக்கின்றன. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சாரியா கூறுகையில்,"நான் 35 ஆண்டுகளாக நகைக்கடை தொழில் செய்து வருகிறேன். ஆடம்பர வாடிக்கையாளர்களை கவர மூன்று ஆண்டுகளுக்கு முன் தங்கம், வெள்ளிகளைக் கொண்டு ஆடைகள் தயாரித்துள்ளேன்.

ஆடைகளின் மேல் தங்கம், வெள்ளிகளைக் கொண்டு வடிவமைப்பு செய்தது மக்களிடையே பெரும் வரவேற்பைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் முகக்கவச பாதுகாப்பு விழிப்புணர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி முகக் கவசம்

அதன்காரணமாக நான் தங்க, வெள்ளியிழைகளைக் கொண்டு முகக் கவசங்களை தயாரிக்க முடிவு செய்து தாயாரிக்க தொடங்கினேன். அதன்படி நான் தயாரித்த வெள்ளி முகக் கவசம் வெள்ளி நிற ஆடையுடன் 40 கிராம் எடை வெள்ளி கொண்டு தாயாரிக்கப்பட்டது. அதேபோல தங்க முகக் கவசம் 46.5 கிராம் தங்கத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு முகக் கவசத்தை செய்ய 7 நாள்கள் தேவைப்பட்டது. அந்த முகக் கவசம் தயாரிப்பு என்பது 10 விழுக்காடு எந்திரம் மூலமும், 90 விழுக்காடு கைகளை கொண்டே உருவாக்கப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தப்படும் கம்பியிழை 0.06 மி.மீ. தடிமன் கொண்டது. மேலும் கவசத்தில் உட்புறமாக பயன்படுத்தப்படும் துணியானது எளிதில் சுவாசம் விடுமளவு மெலிதான அதேசமயம் பாதுகாப்பானது ஆகும்.

அவற்றின் விலையைப் பொருத்தவரை வெள்ளி முகக் கவசமானது 15 ஆயிரம் ரூபாயும், தங்க முகக்கவசமானது ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ2.75 லட்சம் வரை விலைகொண்டுள்ளது. அதில் தங்க முகக்கவசமானது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஹால்மார்க் 96.8 உள்ளிட்ட உயர் ரக தங்கங்களை கொண்டு செய்தால் சற்று விலை கூடுதலாகயிருக்கும்" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "தற்போது கரோனா காலங்களில் ஆடம்பரமாக செய்யக் கூடிய திருமணங்கள் கூட எளிய முறையில் நடைபெற்றுவருகிறது. அதனால் ஆடம்பர வாடிக்கையாளர்களை கவர இதுபோன்ற யுக்தி பலனளிக்கும். ஊரடங்கில் ஆடம்பர திருமணங்கள் செய்ய விரும்புவோர் இந்த தங்க வெள்ளி முகக்கவசங்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு தங்க, வெள்ளி நகையுடன் ஆடம்பர திருப்தியும் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொருளாதார நிச்சயமற்ற தன்மை: புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!

Last Updated : Jul 23, 2020, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.