ETV Bharat / state

"ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்! - தேர்தல்

G.K.Vasan speech about petrol bomb issue: ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் தமிழக அரசு முதலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

G.K.Vasan speech about petrol bomb issue
ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 7:57 AM IST

ஜி.கே.வாசன் பேட்டி

கோயம்புத்தூர்: கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது.

குடியரசு தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரங்களில் அதுவும், அவர் தங்கக் கூடிய இடத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதால், சாதாரண மனிதர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தினுடைய பாதுகாப்பு, குறிப்பாக உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அந்த கடமை அரசுக்கு உண்டு. இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும். அதன் நோக்கம் என்ன என்று மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை, ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் முதலில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். இதில் முக்கிய பிரச்னை என்ன என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

பெட்ரோல் குண்டு வீசியவரை முந்தைய வழக்கில் பாஜகவைச் சார்ந்த வழக்கறிஞர் பிணையில் எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு, “பொய்யான தகவல்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து விசாரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடின உழைப்பால் உயர்ந்து, மற்ற மாநில மாணவர்களுக்கு சவாலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றவாறு நீட் தேர்வு சதவீதம் உயர்ந்து வருகிறது. தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் பெற்றோரையும், மாணவர்களையும் மீண்டும் நீட் தேர்வு என்ற பெயரில் குழப்ப வேண்டாம். கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படுத்துகின்ற செயல்.

பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்கள் கல்வி பயிலும்போது அதற்கு இடையூறாக இருக்கும் வகையில், கையெழுத்து இயக்கம் நடத்துவது தேவையற்றது. திமுக, உண்மையில் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால், சட்ட ரீதியாக செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டு மாணவர்கள் பெற்றோரை குழப்புவது ஒருபோதும் சரியல்ல.

திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால், தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் வளரக் கூடாது, அதை முடக்க வேண்டும் என்ற நிலையில் காவல்துறை உதவியுடன் எதிர்கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றி வருகிறது.

சிறுபான்மையின மக்கள் விடுதலை செய்யக்கூடிய நிலையில், திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மக்கள் மன்றத்தில் ஒரு பேச்சும், நீதிமன்றத்தில் ஒரு பேச்சும் என்பது அவர்களுடைய உண்மையான முகத்தைக் காட்டுகிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்.. ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறம்பானது - டிஜிபி சங்கர் ஜிவால்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.