பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்துவருகின்றனர். இந்நிலையைில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற வேட்டைத் தடுப்புக் காவலரின் மகள் ரஞ்சனா என்பவரை மே 24ஆம் தேதி இரவு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை, அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனையடுத்து, காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து நேற்று நள்ளிரவு சுயம்பு என்னும் கும்கி யானை வரவழைக்கப்பட்டது. கும்கி யானை சுயம்புவை வைத்து உயிர் கொல்லும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடங்கும் எனவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கும்கி யானை சுயம்பு உடுமலையில் சின்ன தம்பி யானையை பிடிக்க துரிதமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.