கோவை மாநகராட்சியில் கூலி உயர்வு வழங்க வேண்டி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பல நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடமும் பல்வேறு மனுக்களை அளித்து வந்த நிலையில், இதற்காக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கூலி உயர்வு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து, இன்று (அக்.25) முதல் தொடங்கினர்.
நேற்று தீபாவளி என்பதால் கோவை மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி உள்ளன. பல்வேறு இடங்களில் அதிகளவு பட்டாசு குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்த தூய்மை பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுப்பட்டுள்ளதால் குப்பைகளை அகற்றம் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: திடீரென்று எரியத் தொடங்கிய கார்; தீயணைப்புத்துறை வராததால் மக்கள் சாலை மறியல்