கோயம்புத்தூர் மாவட்டம் வாகராயம்பாளையத்தில் அதிக விலைக்கு கள்ளச்சாராயம் விற்றுவருவதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தவகல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மாரிராஜ்(32) என்பரை மடக்கி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரது வாகனத்தை சோதனை செய்தபோது அதில் ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கருப்பசாமி(33), பாலன்(30), முருகசாமி(39) ஆகியோரிடமிருந்து சாராயம் வாங்கியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர்களது இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மூன்று பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து சாராயம் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர், திருப்பூர் காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 3000 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நா இருக்க ஊர்ல கள்ளச்சாராயமா... நெவர்... அதகளம் செய்யும் ட்ரோன் கேமரா