ETV Bharat / state

ஐபிஎஸ் வேடமணிந்து அண்ணன் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்டதிட்டம்- விசாரணையில் அம்பலம்

Coimbatore Police caught jewel theft group: அண்ணனின் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்ட திட்டம், கோவையில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் உதவி ஆணையர் பார்த்திபன்
காவல் உதவி ஆணையர் பார்த்திபன்
author img

By

Published : Aug 20, 2023, 1:23 PM IST

காவல் உதவி ஆணையர் பார்த்திபன்

கோயம்புத்தூர்: திருச்சியை சேர்ந்தவர் அப்துல்ரசாக்(47). இவர் வெவ்வேறு நாடுகளில் இருந்து திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு தங்க நகைகளுடன் வரும் நபர்களிடம் நகையை வாங்கி அதனை குறிப்பிட்ட முகவரிக்குக் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் ரசாக்கை கடந்த 3ஆம்தேதி கோவை விமான நிலையம் அருகே வைத்து போலீஸ் சீருடை அணிந்த கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது.

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த பயணி ஒருவரிடமிருந்து அவர் பெற்றதாக கூறப்படும் 500 கிராம் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்ட அந்த கும்பல், ஈரோடு மாவட்டம் பவானி அருகே இறக்கிவிட்டு சென்றது.இது குறித்து இருதினங்கள் கழித்து அப்துல்ரசாக் பீளமேடு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளைக் கும்பலை கைது செய்தனர்.

இது குறித்து காவல் உதவி ஆணையர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன்(28) சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது அண்ணன் தேவேந்திரன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவர், 500 கிராம் எடையுள்ள 6 தங்கச் சங்கிலிகளை பயணி ஒருவரிடம் கொடுத்து, திருச்சியைச் சேர்ந்த அப்துல் ரசாக்கிடம் என்பவரிடம் ஒப்படைக்க கூறி இருந்தார்.

அதை அறிந்து கொண்ட மகேந்திரன் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டு தனது நண்பர்கள் மகேஸ்வரன், (28) குருதேவ்(27), குருமூர்த்தி(30) ஆகியோருடன் போலீஸ் சீருடைகள் வாங்கி கொண்டு காரில் கோவை வந்து உள்ளார்.

மகேஸ்வரன் ஐபிஎஸ் அதிகாரியின் சீருடையையும், அவரது தம்பி குருதேவ் போலீஸ் கான்ஸ்டபிளின் சீருடையையும் அணிந்துகொண்டு போலீஸ் எனக்கூறி அப்துல் ரசாக்கை கடத்தி நகைகளை பறித்து உள்ளனர். சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கம் என்பதால் போலீசில் புகார் அளிக்க மாட்டார்கள் என்று கருதி உள்ளனர்.

இந்த கும்பல் வாடகை காருக்கு ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வாகன பதிவு எண்ணை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. கடத்தல் கும்பலிடமிருந்து 500 கிராம் தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டது குறித்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தங்கம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த இருப்பதாக அவர் தெரிவித்தார் .

இதையும் படிங்க :இன்ஸ்டா காதலுக்காக கணவரை கைவிட்ட பெண்.. நடத்தையில் சந்தேகித்து காதலியை கொன்ற காதலன்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.