ETV Bharat / state

பொள்ளாச்சியில் நீதிமன்ற வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா! - The foundation stone for the court complex

கோவை: பொள்ளாச்சியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா
author img

By

Published : Aug 3, 2020, 1:01 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலூகாவில் தற்போது சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் இரண்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் என நான்கு நீதிமன்றங்கள் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் என ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் கட்டப்படுவதற்காக, பொள்ளாச்சி சங்கம்பாளையம் பகுதியில் 3.30 ஏக்கர் நிலம் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி நகராட்சியிடமிருந்து பெறப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி பகுதியின் எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு தற்போதைய நீதிமன்றங்களுடன் கூடுதலாக ஆறு நீதிமன்றங்கள் சேர்த்து மொத்தமாக பத்து நீதிமன்றங்களும், ஐந்து நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ. 35 கோடியே 39 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் (10 நீதிமன்றங்கள் மற்றும் 5 நீதிபதிகள் குடியிருப்புகள்) கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தகுந்த இடைவெளியுடன் இவ்விழா நடைபெற்றது.

விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்தரம், தமிழ்நாடு துணை சபாநாயகர் வி.ஜெயராமன், முதன்மை மாவட்ட நீதிபதி, ஆர் சக்திவேல், கோவை தலைமை நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ஸ்ரீகுமார், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன், பொள்ளாச்சி வழக்கறிஞர் சங்கத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கட்டுமானப்பணிகள் 16 மாதக் காலத்தில் நிறைவுறும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.