ETV Bharat / state

‘ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் 11 சாலைப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா’ - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு!

பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை வட்டத்தில், நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் 11 சாலைப் பணிகளுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி தவைத்தார். மேலும், 134 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

minister saminathan
வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
author img

By

Published : Jul 21, 2023, 7:55 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி தெற்கு ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர், மாக்கினாம்பட்டி, சோளபாளையம் ஊராட்சிகள் மற்றும் சமத்தூர் பேரூராட்சியில் நேற்று (ஜூலை 20) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார். பின்னர், சோளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், கலைஞர் நூற்றாண்டு நினைவுப் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 134 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

கூடுதலாக, பொள்ளாச்சி தெற்கு வட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறையின் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி தெற்கு வட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பில்சின்னம்பாளையம், ஜமீன்கோட்டம்பட்டி, குள்ளேகவுண்டனூர், பெத்தநாயக்கனூர், பழையூர், காசிபட்டினம் ஆகிய கிராம சாலைகள் ரூ. 3.34 கோடி மதிப்பீட்டில் 7 சாலைப்பணிகளையும், மக்கினாம்பட்டி ஊராட்சியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் 3 பணிகளையும், சந்திராபுரத்தில் ரூ.33.85 லட்சம் மதிப்பில் ஒரு சாலைப்பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

சமத்தூர் பேரூராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்காவை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளார்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40க்கு 40 வெற்றி பெறுவது உறுதி. திட்டமிட்டு நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைகளை கண்டு திமுக பயப்படாது. சட்டப்படி அதனை வென்றெடுக்கும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பல சட்டப் போராட்டங்கள் மூலம் திமுக வென்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களிடம் திமுகவிற்கே வரவேற்பு அதிகம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெரும்” என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி.பிரியங்கா தொண்டாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், சமத்தூர்பேரூராட்சித் தலைவர் காளிமுத்து, சோலபாளையம் ஊராட்சி தலைவர் விசாலாட்சி காணியப்பன், வட்டாட்சியர்கள் ஜெயசித்ரா, ரேணுகாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:திமுக எம்பிக்கு மீதான கொலை வழக்கு செங்கல்பட்டுக்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.