ETV Bharat / state

தாய்மொழிகள் தான் முக்கியம்; மொழி திணிப்பு கூடாது - வெங்கையா நாயுடு - Former vice president venkaiah naidu

தாய்மொழிதான் முக்கியம். தாய்மொழிக்குப் பின் தான் பிறமொழிகள் என்று முன்னாள் குடியரசுத் துணை தலைவர் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 6:49 PM IST

கோவை: நீலம்பூர் பகுதியில் தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜன.7) நடந்த ரோட்டரி மாவட்ட மாநாட்டில் (Rotary District Conference) முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று ரோட்டரியில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, 'சேவைத் துறையான ரோட்டரி மக்களுக்குச் சேவை சிறப்பாகச் செய்து வருகின்றது. தாய்மொழிதான் முக்கியம், அதன் பின்னர்தான் மற்றவை. பிறமொழிகளுக்கு எதிரானவன் அல்ல. அதேவேளையில் ஒவ்வொருவருக்கும் தாய்மொழிதான் முதன்மையானது.

மாநிலங்களவையில் அவரவர் தாய்மொழியில் தான் பேச சொல்வேன். தமிழில் வணக்கம் என்பது பொதுவானது, ஆங்கிலத்தில் நேரத்திற்கு ஒரு வார்த்தை இருக்கின்றது. தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது எனவும் தெரிவித்தார். யோகாவிற்கு மதங்கள் கிடையாது; மோடி யோகாவைத் திணிக்கின்றார் என்கின்றார்கள், யோகா உங்கள் உடலுக்கானது மோடிக்கான தல்ல.

துரித உணவுகள் உடலுக்கு ஏற்றதல்ல. ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உலகை ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொலைக்காட்சி, இணையதளம் போன்றவை குழந்தைகளின் திறனைப் பாதிக்கின்றது; சில சமயங்களில் அவர்களை மனரீதியாகப் பாதிக்கின்றது. தற்கொலைக்குக் கூட தூண்டுகின்றது.

மொழி திணிப்பும் எதிர்ப்பும் வேண்டாம்: தாய்மொழி குறித்துப் பேசுவதால் பிறமொழிகளைப் படிக்கக் கூடாதா? என்று கேட்கலாம். எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. ஆந்திராவில் இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம் என்றேன். ஆனால், டெல்லியில் இந்தி தேவை என உணர்ந்தேன். இந்தியைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால், முதலில் நாம் படிக்க வேண்டுவதும், பேச வேண்டுவதும் தாய்மொழி தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தேவைப்படும் மொழியை நாம் கற்றுக் கொள்வது நல்லது. பல மொழிகள் தெரிந்துகொள்வதால் அந்த கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். நல்ல மருத்துவர்கள், இன்ஜீனியர்கள், நடிகர்கள் என எல்லா தரப்பினரும் இங்கே இருக்கின்றனர்.

தாய்மொழிதான் முக்கியம்: நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதலில் தாய்மொழிதான் முக்கியம். அதன் பின்புதான் பிறமொழிகள்' எனத் தெரிவித்தார். மேலும் அவர், மொழியைத் திணிக்கவும் கூடாது, அதை எதிர்க்கவும் கூடாது என்றும் தெரிவித்தார். நாட்டை வலிமைப்படுத்த வேண்டும்' என்றார்.

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: லஞ்சத்துக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும், உயர்சாதி கீழ்சாதி வேற்றுமை, பாலின வேறுபாடுகளுக்கு எதிராகவும் இளைஞர்கள் நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழ்நாடு ஆளுநர் ரவி, 'தமிழகம்' என்று அழைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது தொடர்பான கேள்விக்கு, அரசியலமைப்பு சட்டப்படி சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு தன்னால் பதில் அளிக்க முடியாது என வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் கோழிக்கறி - மேற்கு வங்க அரசு அதிரடி திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.