கோவை: அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி நேற்று(ஆக.25) பொள்ளாச்சியில் நடந்த திமுக கட்சி நிகழ்ச்சியில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் ஆறுக்குட்டி, திமுகவில் இணைந்தது தொடர்பாக அவருடன் தொலைபேசியில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துடியலூர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் எம்.ஆர்.நாகராஜன், ஆறுக்குட்டியுடன் அலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் ஆறுக்குட்டியை, ’நீங்கள் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டீர்கள்’ என எம்.ஆர்.நாகராஜன் கூறுவதும், பதிலுக்கு ஆறுக்குட்டி, ’எடப்பாடி பழனிசாமியும் தானே சசிகலாவிற்கு துரோகம் செய்தார்’எனக் கூறுவதும் அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.