கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கோட்டூர், சேத்துமடை ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன.
இந்நிலையில், விவசாய நிலங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் வன ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வனத் துறை ஊழியர்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கி கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கி கூறினர்.
மேலும், மின் வேலி அமைத்து, வன விலங்குகளுக்கு சேதம் ஏற்பட்டால் வன உயிரின சட்டம் 1972-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: யானை வரும் வழித்தடத்தில் நடமாட வேண்டாம் - பொதுமக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை!