ETV Bharat / state

யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை! - டிரோன் கேமிரா

கோயம்புத்தூர்: வனக்கோட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே வரும் யானைகள் நடமாட்ட பகுதிகளை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமாக படம் பிடித்து கண்காணித்து வருகின்றனர்.

forest-department-monitors-elephants-with-drone-assistance

author img

By

Published : Aug 19, 2020, 2:09 AM IST

Updated : Aug 19, 2020, 5:30 PM IST

தமிழ்நாடு - கேரளா எல்லையான மாங்கரை, தடாகம் பகுதிகளில் நடமாடும் யானைகளை ட்ரோன் கேமரா உதவியுடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களில் மட்டும் 18 யானைகள் கோவை வனக்கோட்டத்தில் உயிரிழந்தன. இதையடுத்து யானைகளை பாதுகாக்கவும், உயிருக்கு போராடும் யானைகளை உடனடியாக கண்டறியவும், வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு தினங்களில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை ட்ரோன் மூலம் படம் பிடித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சிறுமுகை அடர் வனத்தில் யானைகள் வரிசையாக செல்வது, தண்ணீர் குடிப்பது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு மூலம் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் யானைகளை கண்டறிந்து உடனடியாக மருத்துவம் செய்யவும், யானைகளின் உயிரிழப்பு தடுக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, கோவை வன சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது குட்டி யானை உயிரிழந்ததை கண்டறிந்து, வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் அங்கு சென்ற மருத்துவக் குழுவினர், உயிரிழந்த யானையை உடற்கூறாய்வு செய்தனர்.

யானைகளை டிரோன் உதவியுடன் கண்காணிக்கும் வனத்துறை

அதில் உயிரிழந்த பெண் யானை குட்டி பிறந்து சில தினங்கள் இருக்கலாம் என்றும், பிறந்தவுடன் யானைக்குட்டி உயிரிழந்ததால் தாய் யானை விட்டு சென்றிருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனுடன் சேர்த்து ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கோவை வனக் கோட்டத்தில் 18 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,709; உயிரிழப்பு - 121

Last Updated : Aug 19, 2020, 5:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.