பொள்ளாச்சியை அடுத்த பழைய நாகர் ஊத்து மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சுனன்(67). வால்பாறையில் உள்ள லில்லி எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார் .
காலை அவர் தனது மனைவியுடன் தேயிலைத் தோட்டத்துக்கு சென்றுவிட்டு, கதவுசாத்தி வனப்பகுதி வழியாக நாகர் ஊத்து குடியிருப்புப்பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்த கரடி இருவரையும் துரத்திச் சென்றுள்ளது. அப்போது கரடி அர்ச்சுனனை தாக்கியதில் அர்ச்சுனனின் கால், தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
கரடியிடம் இருந்த தப்பி வந்த அர்ச்சுனனின் மனைவி அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் அர்ச்சுனனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கானக உயிர்களைக் காண ஒரு பயணம்.... வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்