வருடம் தோறும் விஜயதசமி, ஆயுத பூஜை என்றாலே இரு தினங்களுக்கு முன்பு இருந்தே பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் இருப்போர் பூக்களை வாங்கிவிடுவார்கள். இதனால் பூக்களின் வியாபாரம் அதிகரித்து காணப்படும்.
அதிலும் செவ்வந்தி பூவின் வியாபாரம் மிக அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த வருடம் கரோனாவால் பூ வியாபாரம் மிகவும் சோர்வடைந்தது என்று பூக்கடை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் கோவையில் பூ மார்க்கெட் பகுதி முழுவதும் அதிக கூட்டங்களுடன் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரசால் பூ மார்கெட்டில் இருக்கும் பாதி பூக்கடைகள் தேவாங்கர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
நாளை மறுநாள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி வர உள்ள நிலையில் பூ மார்கெட்டில் பொது மக்களின் கூட்டம் கடந்த ஆண்டை விட குறைவாகவே காணப்படுகிறது.
இந்த வருடம் தொழிற்சாலைகளும் அதிகம் இயங்காததால் அவர்களும் வாங்கவில்லை. பொதுமக்களும் குறைந்த அளவே பூக்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால் பூ வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் கடும் இழப்பு. வழக்கமாக இந்தப் பண்டிகை நாள்களுக்கு 500 டன் செவ்வந்தி பூ வரும். ஆனால் இம்முறை 150-200 டன் செவ்வந்தி பூ மட்டுமே வந்துள்ளது. அதுவும் விற்பனையாகாமல் உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: தீபாவளி ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பேருந்துகள்!