கோவை: புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 23ஆவது ஆண்டாக புலியகுளம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் 3 நாள்களாக கால்பந்து போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மொத்தமாக 97 போட்டிகளில் 64 குழுக்கள் விளையாடின. நேற்று (ஜனவரி 16) மாலை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் ஏஜேஎஸ் அணியும், ரத்தினம் கல்லூரி அணியும் மோதின.
இரண்டு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலை பெற்றன. பின்னர் டைபிரேக்கர் முறையில் ஏஜேஎஸ் அணி மூன்று புள்ளிகளும் ரத்தினம் கல்லூரி அணி ஒரு புள்ளியும் பெற்றதை தொடர்ந்து ஏஜேஎஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஏஜேஎஸ் அணிக்கு பயாஸ் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சிலம்பரசன், எம்.கே. குரூப் ஆஃப் கம்பெனிஸின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் உள்ளிட்டோர் கேடயங்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா!