ETV Bharat / state

கோவை இரும்பு குடோனில் தீ விபத்து

கோவை: பொள்ளாச்சி அருகே நல்லூரில் பழைய வாகனங்கள் உடைக்கும் இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

Fire broke out Coimbatore Iron shop
Fire broke out Coimbatore Iron shop
author img

By

Published : May 13, 2020, 11:27 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, நல்லூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் பழைய வாகனங்கள் உடைக்கும் இரும்பு குடோனை நடத்திவருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த நாற்பது நாள்களுக்கு மேலாக இவர் தனது கடையை திறக்கவில்லை,

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும், இரும்புக் கடைகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில், அடையாளம் தெரியாத சில நபர்கள் சாலையோரம் புகைப்பிடித்து சென்றதால் இவரது இரும்பு குடோனில் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கோவை இரும்பு குடோனில் தீ விபத்து

பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருள்கள் நாசமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 47 வீடுகள் தீயில் எரிந்து நாசம்... ஒருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.