ETV Bharat / state

கோவையில் பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் முறையாகப் பணி செய்யாமல் இருந்த பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
கோவையில் பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
author img

By

Published : Oct 7, 2021, 11:09 PM IST

கோயம்புத்தூர்: மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளராக கலையரசி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.

அப்போது அவரிடம் பல்வேறு நிறுவனங்கள் மீது பொதுமக்கள் மோசடிப் புகார் அளித்தனர். இவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதாக மேற்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமிக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணை அறிக்கையை மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துச்சாமியிடம் காவல் துறையினர் வழங்கினர்.

பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

அதில் பொதுமக்கள் புகார் அளித்த நிறுவனங்கள் மீது காவல் ஆய்வாளர் கலையரசி வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து, மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் இவர் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சான்றிதழ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.