ETV Bharat / state

மகளின் பிறந்தநாளில் காதலனை கொலை செய்த தந்தை.. கோவையில் நடந்தது என்ன? - காதலனை கொலை செய்த தந்தை

காதலியின் பிறந்தாளை கொண்டாட குடிபோதையில் சென்ற காதலனை, காதலியின் தந்தை கொலை செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

மகளின் பிறந்தநாளில் அவர் காதலனை கொலை செய்த தந்தை! நடந்தது என்ன?

author img

By

Published : Jun 5, 2023, 2:16 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்ணும், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதாக பிரசாந்த் என்ற இளைஞரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 5) 18 வயது இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் இரவு 12 மணியளவில், காதலர் பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் இளம்பெண்ணின் இல்லத்திற்கு பிறந்தநாளை கொண்டாடச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் சென்றதாக தெரிகிறது. குடிபோதையில் அவர்கள் இளம்பெண்ணின் வீட்டின் சுவரை ஏறி குதித்து சென்றுள்ளனர்.

அப்போது சத்தம் கேட்டு வந்த இளம் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் இவர்களை பார்த்துள்ளனர். இவர்கள் குடிபோதையில் பிறந்தநாளை கொண்டாட வந்ததால் இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களை இங்கிருந்து செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், இளைஞர்கள் திரும்பிச் செல்ல மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதையும் படிங்க: Afghanistan Poison Attack: ஆப்கானில் பள்ளி சிறுமிகள் மீது விஷ தாக்குதல்.. 80 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

இதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தந்தை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து இளைஞரை தாக்கியுள்ளார். மேலும், உறவினரும் இளைஞரை கட்டையால் தாக்கி உள்ளார். இதில் இளைஞரின் உடலில் தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த இளைஞரை அவரது நண்பர்கள் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இளைஞரின் நண்பர்கள். ஆனால் அரசு மருத்துவமனையில் இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, இளைஞரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள செட்டிபாளையம் காவல்துறையினர் இளம் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் வாபஸ்? மிரட்டலா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.