விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனையடுத்து அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விவசாயிகள் கூறுகையில், ”விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு மாற்றாக புதை வடம் வழியாக மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கெனவே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விளை நிலங்களுக்கும் இழப்பீடு தரவேண்டும். சாலை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது” என்றனர்.
இதையும் படிங்க:
ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவருக்கு அபராதம் விதித்த ரயில்வே அலுவலர்கள்!