கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும், மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள நண்டாங்கரை தடுப்பணையில், அதிகளவில் வண்டல் மண் தேங்கியதால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் தூர்வாரபட்டு, மண் அணை அருகே இருந்த அரசு நிலத்தில் கொட்டபட்டது.
மேலும் இம்மணலை, விவசாயிகள் விவசாயத்திற்கும், மண்பாண்டங்கள் தயாரிப்பதற்கும் அரசின் அனுமதி பெற்று பயன்படுத்த அனுமதியளிக்கபட்டது.
மணல் கடத்தல்
ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி அல்லாத வேறு பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரசின் அனுமதியில்லாமல், சட்டவிரோதமாக மண் அள்ள பயன்படுத்தும் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் டிப்பர் லாரிகளில் மண் கடத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது
தடுப்பணையில் தூர்வாரபட்டு எடுக்கபட்ட வண்டல் மண்னை, விவசாயிகள் டிராக்டரில் எடுத்து பயன்படுத்த அனுமதிக்கபட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அரசியல்வாதிகள் டிப்பர் லாரிகளில் மண் கடத்துவதாகவும்; இதனால் கல்கொத்தி கிராம மக்கள் பயன்படுத்தும் சாலை பழுதடைந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.
மேலும் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் யானை, காட்டுபன்றி போன்ற வனவிலங்குகள் வரும்போது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
இதில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மண்கடத்தலை தடுக்க வேண்டுமெனவும், சட்ட விரோதமாக மண் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 3ஆவது அலை டெல்டா பிளஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்