ETV Bharat / state

உலக தென்னை தினம்: விஷேச பூஜையுடன் கொண்டாடிய விவசாயி - உலக தென்னை தினம்

பொள்ளாச்சி: உலக தென்னை தினத்தை முன்னிட்டு தென்னை மரத்துக்கு விஷேச பூஜை செய்து விவசாயி ஒருவர் வழிபட்டுள்ளார்.

Farmer celebrated world coconut day with special pooja
உலக தென்னை தினம் கொண்டாடிய விவசாயி
author img

By

Published : Sep 3, 2020, 8:38 AM IST

பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இங்கு விளையும் இளநீர், தேங்காய், காயர் பித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உலக தென்னை தினம் செப்டம்பர் 2ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஆனைமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி என்பவர் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு பூத்தூவி சிறப்பு பூஜைகள் செய்து, குடும்பத்துடன் வழிபட்டார்.

தென்னை மரங்களை தங்கள் குழந்தைகள்போல் வளர்ப்பதாகவும், செப்டம்பர் 2ஆம் தேதி உலக தென்னை தினம் கொண்டாடுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் பொன்னுச்சாமி கூறினார். மேலும், தங்களது காலத்துக்குப் பிறகு வரும் சங்கதிகள் தென்னை தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: திருநங்கைகள் உருவாக்கிய கோவை டிரான்ஸ் கிச்சன் திறப்பு விழா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.