கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் ஜவஹர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜன். இவர் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இதனிடையே, முத்துராஜுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றும் (ஜூலை 1) இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துராஜ், மணிமேகலை தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் வெளியிலிருந்து ஒரு கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் முத்துராஜும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, மஞ்சள் நிற ரசாயன பொடியை நீரில் கரைத்து குடித்துள்ளார்.
சிறிதுநேரம் கழித்து முத்துராஜின் மருமகள் குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்துள்ளார். அப்போது, அவர் வீட்டில் மணிமேகலை ரத்தம் இறந்து கிடந்ததையும், அருகில் முத்துராஜ் மயக்கத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். மயக்கத்திலிருந்த முத்துராஜிடம் கேட்டபோது, ’நான்தான் மணிமேகலையின் தலையில் கல்லைப்போட்டு கொன்றேன், நானும் இப்போது சாகப்போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாகவே முத்துராஜ் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:’பணத்தை வாங்கிட்டு எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க’ - தற்கொலை செய்து கொண்ட பெண் காவலரின் வாக்குமூலம்!
குடும்பத் தகராறு: மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை - கோயம்புத்தூர் கணவன் தற்கொலை
கோயம்புத்தூர்: குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.