ETV Bharat / state

இளம் தலைமுறையை மிரட்டும் இதயநோய்.. ஹார்ட் அட்டாக் Vs கார்டியாக் அரெஸ்ட் - what is Heart Attack in tamil

Heart Attack Vs Cardiac Arrest: ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் இரண்டும் வெவ்வேறு என்ற விழுப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாத நிலையில் இது தொடர்பான உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து விளக்குகிறார் கார்டியாக் பிசியோதெரபி பேராசிரியர் சுகன்யா.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 10:24 PM IST

Updated : Sep 11, 2023, 5:09 PM IST

கோயம்புத்தூர்: நடனம் ஆடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு, விளையாடிக் கொண்டிருந்த மாணவி உயிரிழப்பு, நல்ல உடல் நலத்துடன் இருந்தவர் திடீரென ஹார்ட் அட்டாக்கினால் உயிரிழப்பு என இவை தற்போது அதிகமாக நாம் எதிர்கொள்ளும் செய்திகள். இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வயதானவர்களையே அதிகம் தாக்கும் என்ற கருத்தை சமீப காலமாக இவை பொய்யாக்கி வருகின்றன.

அதிலும், கரோனாவிற்குப் பிறகு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் இளம் வயதினர் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுவது உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும், திடீரென அதிக வேலை செய்வதும் ஆகும். காலமாற்றத்தினால் உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும் நாம் அதிகளவில் இதய நோயாளியாக மாறுவதற்கு முக்கிய காரணாக அமைகிறது.

சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது உணவு பழக்க வழக்கத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளும், எண்ணெய், உப்பு நிறைந்த உணவு வகைகளுமே அதிக அளவு உள்ளது. உடலின் எந்த பகுதியில் பிரச்னை ஏற்பட்டாலும் நாம் முன்கூட்டியே சுதாரித்து விட முடியும். ஆனால், உடலின் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும் இதயத்தில் பிரச்சினை இருப்பதை நம்மால் எளிதில் உணர்ந்து விட முடிவதில்லை. சமீபத்தில் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனாலே குறிப்பிட்ட காலத்தில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதற்கு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இதயத்தில் ஏற்படும் பல வகையான பிரச்சினைகளையும் நாம் ஹார்ட் அட்டாக் என்றுதான் கருதுகிறோம். ஆனால், மாரடைப்பு (heart attack) வேறு, இதய செயழிலப்பு (cardiac arrest) என்பது வேறு. இது குறித்து கோயம்புத்தூர் கேஜி கார்டியாக் பிசியோதெரபி கல்லூரி பேராசிரியர் சுகன்யா விவரித்துள்ளார்.

மாரடைப்பு (heart attack): மாரடைப்பு என்பது ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு ரத்தம் செல்லாமல் இதயத் தசைகள் செயலிழந்து விடுவது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பினால் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்படுவோம். ஆனால், இன்று 25 வயது முதலே சிலர் மாரடைப்பினால் இறந்து விடுகிறார்கள்.

இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகை பிடித்தல், உடலில் சேரும் அதிக அளவு கொழுப்பு, மது அருந்துதல், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாக கருதப்படுகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்: இதயத்தில் அழுத்தக்கூடிய எரிச்சல் தன்மையுடன் பரவும் கடுமையான வலி, மூச்சுத் திணறல், படபடப்பு ஆகியவை ஐந்து முதல் 15 நிமிடங்கள் ஏற்படும். இதயம் நலம் காக்க இதயத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகள் மிக அவசியம். தினமும் 20 நிமிடம் நடைபயிற்சியே நம் வாழ்வில் நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுக்கும்.

இதய செயலிழப்பு (cardiac arrest): இதய செயலிழப்பு என்பது இதயத்தால் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் வழங்குவதில் ஏற்படும் சிரமம் அல்லது பலவீனமான இதயத்தின் அறிகுறியே இதய செயலிழப்பு.

இதய செயலிழப்பின் அறிகுறிகள்: உடல் சோர்வு, அடிக்கடி மயக்கம் வருதல், உடல் எடை அதிகரிப்பு, பசியின்மை, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, படபடப்பு, தூக்கமின்மை ஆகியவை இதய செயலிழப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.

உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்கு ஏற்படும் நன்மைகள்: உடற்பயிற்சி செய்வதால் இதயத்தின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, அதிக உடல் எடை போன்றவற்றைக் குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.

உடற்பயிற்சி மனநலத்தை அளித்து ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கிறது. உடலின் இயக்கத்தில் இதயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இதயத்தை ஆரோக்யமாக பராமரிக்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் நாள் உலக இதய விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: குறட்டை பிரச்னைக்கு இதுவும் காரணமா? - மூக்கு எலும்பு வீக்கத்தால் வரும் தொல்லை

Last Updated : Sep 11, 2023, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.