ETV Bharat / state

'திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு' - எஸ்.பி.வேலுமணி - திமுக

திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளன என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி தொடர்பான காணொலி

author img

By

Published : Feb 11, 2022, 8:25 AM IST

கோவை: கருமத்தம்பட்டி நகராட்சியில் 27 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று (பிப்.10) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்தான் தற்போது வரை செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து திமுக எதுவுமே செய்யவில்லை. கோவையை மாற்றி அமைத்து இருக்கிறோம் என்ற உரிமையுடன் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.

திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தும் அவற்றை நிறைவேற்றவில்லை. திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் பிரச்னை பேசி முடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கூலியை அரசால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இந்த ஆட்சியில் தொழில் முனைவோர் நன்றாக இல்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளன.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி தொடர்பான காணொலி

கரோனா தொற்றினை அதிமுக ஆட்சியில் சிறப்பாக கையாண்டு உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து போயினர். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத கட்சி, திமுக.

நகராட்சிக்குத் தேவையான நிதிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மக்கள் தொகை அடிப்படையில் கொடுத்துவிடும். சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலும் கருமத்தம்பட்டி பகுதிக்குப் பணிகள் செய்ய முடியும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் 8 மாத கால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை: அண்ணாமலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.