கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அடுத்த சீலீயூர் பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவனத்தின் மேட்டுப்பாளையம் கிளையில் நடத்துனராக இருந்த தனது சகோதரர் அருள்ராஜிடம் பணம் பெற்றுள்ளார்.
இதேபோன்று அருள்ராஜ் பலரிடமிருந்து 30 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்த நிலையில், உறுதியளித்தபடி இதுவரை யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் காணாமல் போன அருள்ராஜ், தற்போது வரை என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குட்டிகளுடன் கம்பீரமாக நடந்து வந்த புலி - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்