ETV Bharat / state

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் விசாரணைக்கு ஆஜர்! - கோவை காவலர் பயிற்சி பள்ளி

Kodanad murder and robbery case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனும், தொழிலதிபருமான சிவக்குமார் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

Ex IPS officer son appeared for investigation in Kodanad murder and robbery case
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் விசாரணைக்கு ஆஜர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 12:13 PM IST

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. அண்மையில் இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை, கோவையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்றுத் தர வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கோரிக்கை விடுத்தாா்.

அதன் அடிப்படையில், நீதிமன்றம் சாா்பில் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் விபத்து குறித்து ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்த சிவகுமார் என்பவரிடம், சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், இன்று (நவ.28) அவர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராக வந்தார். கனகராஜ், சேலம் ஆத்தூர் பகுதியில் விபத்தில் உயிரிழந்தபோது சிவக்குமார் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் அளித்ததாக விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். சிவக்குமார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் என்பதும், தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.