ETV Bharat / state

டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வியெழுப்புவோம் - ஈபிஎஸ் பேச்சு - in the TN assembly regarding

டிஐஜி தற்கொலை விவகாரத்தில், மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் எனவும்; தமிழகத்தில் பாஜக 25 இடங்களில் போட்டி எனக் கூறுவது அக்கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காகவே என கோவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 19, 2023, 6:17 PM IST

Updated : Jul 19, 2023, 9:58 PM IST

டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வியெழுப்புவோம் - ஈபிஎஸ் பேச்சு

கோவை: டிஐஜி தற்கொலை விவகாரத்தில், (DIG Vijayakumar IPS suicide) மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றும்; நாடாளுமன்றத் தேர்தலை மையமாக கொண்டே 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நாளை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு குடிப்பழக்கம் இல்லாததால் டாஸ்மாக் மதுபான விலை உயர்வு பற்றி தெரியாது என்றும் பேசியுள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 19) கோவை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகதான் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை எனும் நிலையில் 25 இடங்களில் பாஜக போட்டி என சொல்லி வருவது குறித்த கேள்விக்கு, 'அது அக்கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக செய்வது' எனப் பதிலளித்தார். மது விலைகள் உயர்த்தப்பட்டது குறித்த கேள்விக்கு, 'குடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. மதுபான விலை உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்க வேண்டும்’ என்றார். திமுக அரசு மட்டும் தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது என்றும் விமர்சித்தார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜா போன்றோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அதிமுகவில் அமைச்சர் ஒருவர் மீது புகார் வந்த பொழுதும் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு செந்தில் பாலாஜி, ஸ்டாலினை நிறைய கவனித்திருப்பதாகவும், ஆகவே அவர் ஏதாவது வாயைத் திறந்து சொல்லிவிடுவார் என பயந்து இரவோடு இரவாக அவரை சந்தித்து ஆறுதல் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். அதோடு ஆட்சி கவிழ்ந்து போய்விடுமோ என்று அச்சத்தில் சந்தித்துள்ளதாகவும்; இதுதான் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதோடு, உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையெனில், சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். டிஐஜி தற்கொலை விவகாரத்தில், மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்.

பஞ்சாலைகளும் கார்மென்ட்ஸ்களும் அதிகமாக இருக்கும் கோவையில் ஜவுளித் தொழில் இன்று நலிவடையும் சூழ்நிலை இருக்கிறது. மறுசுழற்சி கூட்டமைப்பினரின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தாமதமாக வந்திருக்கிறது' என்றார்.

'தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டமைப்பு கூட்டியுள்ள கூட்டத்தில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் கூடி கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் கூட்டம் போட்டதற்காக நாங்கள் கூட்டம் போடவில்லை. ஏற்கனவே திட்டமிடப்பட்டு தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டம். அதிமுகவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்கள் புதுப்பித்தல் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் வரை 1.72 கோடி உறுப்பினர்கள் சேர்ந்த நிலையில், எங்களுடைய இலக்கு இரண்டு கோடி ஆகும். நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை பணிகள் ஆங்காங்கே துவங்கின. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அந்தந்த மாநிலத்தில் தேர்தலுக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து தான் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் 'மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை (Magalir Urimai Thittam) செயல்படுத்த பல நிபந்தனைகள் விதித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவர்களுக்கும் வழங்கப்படும் என்றுதான் சொன்னார்கள்.

மறுசுழற்சி கூட்டமைப்பு மற்றும் சிறுகுறு பஞ்சாலைகள் தமிழக அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இது தொடர்பாக நான் அறிக்கை கொடுத்து 12 நாட்களுக்கு மேலாகியும், திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நாளை அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது' என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: Ponmudi ED Raid: நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள்.. 6 மணி நேரம் நடந்த 2ஆம் நாள் விசாரணை!

Last Updated : Jul 19, 2023, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.