ETV Bharat / state

'ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதா போல் ஈபிஎஸ், ஓபிஎஸ் தெருத்தெருவாக அலைவார்கள்..!' - டிடிவி தினகரன் - rathakannir

கோவை: "ரத்தக்கண்ணீர் எம். ஆர். ராதா-வை போல் ஈபிஎஸ், ஓபிஎஸ் தெருத் தெருவாக அலைவார்கள் என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
author img

By

Published : May 13, 2019, 9:30 AM IST

அமமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் சூலூர் வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கருமத்தம்பட்டியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் கவிழும். துரோகத்திற்கு சிறந்த உதாரணம் எடப்பாடி பழனிச்சாமிதான். பால்காரர் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு மக்களுக்கு துரோகம் செய்கின்றனர்.

டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை

இவர்கள் இருவரும் தேர்தல் முடிந்த பிறகு ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதாவை போல தெருத்தெருவாக அலைவார்கள். சோமனூரில் நொய்யல் நதி சீரமைக்கப்படும், பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டுவரப்படும், சோமனூர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிலையம் உருவாக்கப்படும், விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண வசதிகள் செய்து தரப்படும், விசைத்தறி ஜவுளி தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்" என்று, தினகரன் உறுதியளித்தார்.

சு.சீனிவாசன்.     கோவை

இடைத் தேர்தலுடன் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பேச்சு 

அமமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன்  கருமத்தம்பட்டியில் பிரச்சாரம் செய்தார், அவர் அப்போது பேசுகையில் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் கவிழும், துரோகம் என்றால் எடப்பாடி பழனிச்சாமி, உதாரணம் பால்காரர் பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும்,  மக்கள் நலனில் சிறிதும் அக்கரை இல்லாமல் செயல்பட்டு மக்களுக்கு துரோகம் செய்கின்றன், இவர்கள் இருவரும் தேர்டிதல் முடிந்த பிறகு ரத்தக்கண்ணீர் படத்தின் எம்ஆர்.ராதா வை போல தெருத்தெருவாக அலைவார்கள். மோடியின் ஏஜென்டாக எடப்பாடி செயல்படுவதால் இதுவரை ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளார் மீண்டும் அம்மா கண்ட ஆட்சியை தமிழகத்தில் நடைபெறும், நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவேன் என்றும், சோமனூரில் நொய்யல் நதி சீரமைக்கப்படும், பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டுவரப்படும், சோமனூர் கருமத்தம்பட்டியில் பேருந்து நிலையம் உருவாக்கப்படும்,  விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண வசதிகள் செய்து கொடுக்கப்படும்,  விசைத்தறி ஜவுளி தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும், 60 வயதைத் தாண்டியவர்களுக்கு மாதம் 4000 ஓய்வூதியம் வழங்கப்படும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தினகரன் உறுதியளித்தார்

Video in reporter app

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.