கோயம்புத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் மான், காட்டுமாடு, சிறுத்தை, கரடி, காட்டு யானை என பல்வேறு விலங்குகள் வசித்துவருகின்றன. இங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆழியார் சோதனை சாவடி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே வனத்தைவிட்டு வெளியேறி ஒற்றை காட்டு யானை அப்பகுதிக்கு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனச்சரகர் புகழேந்தி கூறுகையில், ஆண்டிற்கு ஒருமுறை ஒற்றை காட்டு யானை இப்பகுதியில் நடமாடுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை உயர் அலுவலர்கள் ஆலோசனைப்படி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். காட்டு யானை ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன ரோந்து பணியில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:டாட்டா சுமோ வாகனத்தை குத்தி பதம்பார்த்த காட்டு யானை!